திருவள்ளூர் அருகே, உள்ள வாணியம் சத்திரம் என்ற கிராமத்தில் ரமேஷ், தங்கலட்சுமி என்ற தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் தங்க லட்சுமியின் கணவர் உயிர் இழந்தார்.
இதற்கு நடுவே, உயிரிழந்த ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்த மரணம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அதோடு, ரமேஷின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் மூச்சு திணறி உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் அதிரடி விசாரணையை மேற்கொண்டனர். இதில் ரமேஷின் மனைவி தங்கலட்சுமியின் மீது, சந்தேகம் எழுந்ததால், அவரிடம் காவல்துறையினர் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டதில், பல்வேறு உண்மைகள் வெளியானது.
அதாவது, கணவன் நாள்தோறும் குடித்துவிட்டு, வந்து, டார்ச்சர் செய்ததன் காரணமாக, அவர் தொந்தரவு தாங்க முடியாமல், கணவன் உறங்கிக் கொண்டிருந்தபோது, மனைவி தங்க லட்சுமி தான் தலையணையை வைத்து, முகத்தில் அழுத்தி, அவரை கொலை செய்தார் என்ற உண்மையை அவரே ஒப்புக்கொண்டார் தங்கலட்சுமி.
இதன் பிறகு காவல்துறையினர் தங்கலட்சுமியை கைது செய்து, அவர் மீது, கொலை வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.