நாள்தோறும், மத்திய, மாநில அரசுகள் தொடர்பான பல்வேறு துறைகளில் இருந்து, வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதனை பார்த்து, படித்து, தெரிந்து கொண்டு, வேலைவாய்ப்பற்ற நபர்கள் பயன்பெறுகிறார்கள். அந்த விதத்தில், இந்த செய்தி குறிப்பை நீங்கள் பார்த்து பயன்பெறலாம்.
இந்திய வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில், முதன்மை விஞ்ஞானி, மூத்த விஞ்ஞானி போன்ற 368 காலி பணியிடங்கள் இருக்கின்றன. ICAR ஆராய்ச்சி நிறுவனங்களில் பல்வேறு பகுதிகளில், நிரந்தர பணியில், நிரப்பப்பட, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது. ஆகவே, இந்த பணிகளில் சேர ஆர்வம் இருப்பவர்கள், அனைத்து தகுதி விவரங்களையும் தெரிந்து கொண்டு, இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
அதாவது, principal scientist,senior scientist, என்று ஒட்டுமொத்தமாக 368 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது, இந்தப் பணியில் சேர விருப்பம் கொள்ளும் நபர்கள், அரசாங்கத்தால், அங்கீகாரம் வழங்கப்பட்ட, கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து, இந்த பணிக்கு தொடர்புள்ள துறையில், doctoral degree in engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இது மத்திய அரசு சார்ந்த பணி என்பதால், இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு, ஒரு மாதத்திற்கு, 1,31,400 முதல் 2,17,100 ரூபாய் வரையில் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள், ஓய்வு பெற்ற அல்லது பொது நிர்வாகம், விவசாயம் மற்றும் அது தொடர்பான துறைகளில், குறைந்த பட்சம் 25 வருடங்கள் முன் அனுபவம் பெற்ற அரசு ஊழியர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள், தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படவுள்ளனர.தகுதியுள்ள, ஆர்வமுள்ள நபர்கள் https://www.asrb.org.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று விண்ணப்பங்களை அனுப்பலாம்.