fbpx

மக்களே மறக்காதீங்க…! ஹோட்டலில் தரமற்ற உணவா…? உடனே இந்த App மூலம் புகார் செய்யவும்…!

தரமற்ற கலப்பட உணவுகள்‌ குறித்த பொதுமக்களின்‌ புகார்‌நடவடிக்கைகளை எளிதாக்கும்‌ விதமாக, விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும்‌ வசதிகளுடன்‌ புதிய இணையதளம்‌ மற்றும்‌ செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகம்‌ செய்துள்ளது.

ஹோட்டல்‌, பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள்‌ மற்றும்‌ கடைகளில்‌ பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள்‌ கிடைப்பதை உறுதி செய்யும்‌ வகையில்‌, அரசின்‌ உணவு பாதுகாப்புத்துறை மூலம்‌ பல்வேறு நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகிறது. இதில்‌ தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின்‌ புகார்‌ நடவடிக்கைகளை எளிதாக்கும்‌ விதமாகவும்‌, விரைவு நடவடிக்கைக்கு ஏதுவாகவும்‌ புதிய இணையதளம்‌ மற்றும்‌ செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில்‌ பொதுமக்கள்‌ தங்களது புகார்களை டைப்‌ ஏதும்‌ செய்யாமல்‌ மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும்‌ வசதியுடன்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌ ஆகிய இரண்டு மொழிகளில்‌ உருவாக்கப்பட்ட புதிய இணையதளம்‌ foodsaftey.tn.gov in மற்றும்‌ கைபேசி செயலி Tnfood safety Consumer App பதிவிறக்கம்‌ செய்யும்‌ விதமாக அறிமுகம்‌ செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இப்படி ஒரு திட்டமா..? 18 வயது பூர்த்தி அடைந்த நபர்களுக்கு மானியம்...! கூட்டுறவு வங்கி மூலம் எப்படி பெறுவது...?

Tue May 30 , 2023
பிரதம மந்திரியின்‌ வேலை வாய்ப்பு உருவாக்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ கூட்டுறவு வங்கிகள்‌ மூலமாக நிதி உதவியினை பெற்று புதியதாக தொழில்‌ தொடங்க மானியம் பற்றிய விவரங்களை பார்க்கலாம். காதி மற்றும்‌ கிராம தொழில்‌ வாரியம்‌, மாநில காதி மற்றும்‌ கிராமத்‌ தொழில்கள்‌ ஆணையம்‌ மற்றும்‌ மாவட்ட தொழில்‌ மையம்‌ மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌ இந்த நிதிஆண்டு முதல்‌ உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம்‌ வரையிலான […]

You May Like