fbpx

வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! நோட் பண்ணிக்கோங்க..!!

செப்டம்பர் மாதத்தில் வங்கி தொடர்பான வேலைகள் இருந்தால், இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலை கண்டிப்பாக சரிபார்த்துக் கொள்ளவும். அடுத்த மாதத்தில் பல திருவிழாக்கள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை உட்பட 16 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

பொதுத்துறை தவிர, தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். இந்தியாவில் இன்னும் சில நாட்களில் பண்டிகைக் காலம் தொடங்க உள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பான பட்டியலை தற்போது பார்க்கலாம்.

செப்டம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல் (Bank Holidays) :

3 செப்டம்பர் 2023 – ஞாயிற்றுக்கிழமை

6 செப்டம்பர் 2023 – ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி காரணமாக சென்னை, புவனேஸ்வர், ஹைதராபாத், பாட்னாவில் வங்கிகள் மூடல்

செப்டம்பர் 7, 2023 – ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு அகமதாபாத், சண்டிகர், டேராடூன், காங்டாக், தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகர் வங்கிகளுக்கு விடுமுறை

செப்டம்பர் 9, 2023 – இரண்டாவது சனிக்கிழமை

செப்டம்பர் 10, 2023 – ஞாயிற்றுக்கிழமை

செப்டம்பர் 17, 2023 – ஞாயிற்றுக்கிழமை

செப்டம்பர் 18, 2023 – விநாயக சதுர்த்தி பண்டிகை காரணமாக பெங்களூரு, தெலங்கானாவில் வங்கிகள் இயங்காது

செப்டம்பர் 19, 2023 – விநாயக சதுர்த்தியை முன்னிட்டு அகமதாபாத், பேலாப்பூர், புவனேஷ்வர், மும்பை, நாக்பூர், பனாஜி ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

செப்டம்பர் 20, 2023 – விநாயக சதுர்த்தி மற்றும் நுவாகை காரணமாக கொச்சி மற்றும் புவனேஸ்வரில் வங்கிகள் இயங்காது

செப்டம்பர் 22, 2023 – ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தை முன்னிட்டு கொச்சி, பனாஜி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

செப்டம்பர் 23, 2023 – நான்காவது சனிக்கிழமை

செப்டம்பர் 24, 2023 – ஞாயிற்றுக்கிழமை

செப்டம்பர் 25, 2023 – ஸ்ரீமந்த் சங்கர்தேவ் பிறந்தநாளையொட்டி, கவுகாத்தியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

செப்டம்பர் 27, 2023 – மிலாட்-இ-ஷரீப் காரணமாக ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்படும்

செப்டம்பர் 28, 2023 – ஈத்-இ-மிலாத் காரணமாக அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, டேராடூன், தெலுங்கானா, இம்பால், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி ஆகிய இடங்களில் வங்கிகள் இயங்காது

செப்டம்பர் 29, 2023 – ஈத்-இ-மிலாத்-உன்-நபி காரணமாக காங்டாக், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

Chella

Next Post

Pandian Stores | இந்த சீரியல் நடிகைக்கு மட்டும் சம்பள உயர்வு..!! ஒருவேள அப்படி இருக்குமோ.?

Sun Aug 27 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் (Pandian Stores). கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடர், இப்போது வாழ்க்கையில் மக்கள் மறந்துள்ள கூட்டுக் குடும்பம் பற்றிய கதை. அண்ணன்-தம்பிகள் இடையில் பிரிந்தாலும் பாசத்தின் பெயரில் மீண்டும் சேர்ந்துவிடுகிறார்கள். இந்நிலையில், இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதாவிற்கு மட்டும் அண்மையில் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் அவர் […]

You May Like