கேரள மாநிலத்தில் காதலியின் மீது எழுந்த சந்தேகத்தின் காரணமாக, இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த அவருடைய காதலன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தேவா என்ற 24 வயது இளம் பெண்ணை அவருடைய காதலர் வைஷ்ணவ் என்பவர் வேறு ஒருவருடன் தன்னுடைய காதலி தொடர்பு வைத்திருக்கிறாரோ என்று சந்தேகப்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக, இந்த சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் மாலை 4 மணி அளவில் தேவாவின் தலையில், அவருடைய காதலன் வைஷ்ணவ் குக்கரால் பலமாக அடித்துள்ளார். குற்றம் சுமத்தப்பட்ட அந்த காதலன் குக்கரில் இருந்த சாதத்தை கீழே கொட்டி விட்டு, அதன் பிறகு அந்த குக்கரை கொண்டு, படுக்கையறையில் இருந்த அந்த இளம் பெண்ணை கொடூரமான முறையில் தாக்கி இருக்கிறார்.
இதன் காரணமாக, பலத்த காயமடைந்த தேவா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து உயிரிழந்தார். அவருடைய சகோதரியான கிருஷ்ணா அந்த இளம் பெண்ணின் தொலைபேசிக்கு பலமுறை அழைப்பு விடுத்தும், அவர் எந்த விதமான பதிலும் தெரிவிக்கவில்லை. ஆகவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் வந்து பார்த்தபோது அந்த இளம் பெண் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
ஆகவே உயிரிழந்த அந்த பெண்ணின் சகோதரியான கிருஷ்ணா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், அந்த இளம் பெண் தேவாவின் காதலன், வைஷ்ணவ் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் வைஷ்ணவ் இது பற்றி தெரிவித்ததாவது, தேவா எப்போதும் தன்னுடைய போனை பயன்படுத்திக் கொண்டே உள்ளதாகவும், அடிக்கடி யாருக்காவது குறுஞ்செய்தி அனுப்பி கொண்டே இருந்ததாகவும் குற்றம் சுமத்தினார். அதோடு, அந்த இளம் பெண்ணை வைஷ்ணவ் பலமுறை எச்சரித்ததாகவும் கூறி இருக்கிறார். மேலும், அந்த உயிரிழந்த இளம் பெண் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் குற்றவாளி தெரிவித்துள்ளார்.
ஆகவே இளம் பெண்ணை கொலை செய்ததை அவருடைய காதலன் ஒப்புக்கொண்டார். வைஷ்ணவி மற்றும் தேவா உள்ளிட்ட இருவரும், தங்களுக்கு இருந்த பொதுவான நண்பர்கள் மூலமாக, கேரளாவில், சந்தித்து நட்பாக பழகி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும், இருவரும் ஷேர் மார்க்கெட், டிரேடிங் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் வீட்டிலிருந்து பணியாற்றி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பெங்களூருக்கு சென்றுள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.