fbpx

கமலை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்..!! ஜாதி வேற இருக்கா..?

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டது. தக் லைஃப் என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தில் கமலின் கேரக்டர் பற்றிய அப்டேட்டும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தக் லைஃப் டைட்டில் குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளது வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான தக் லைஃப் டீசர், ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள இதில், ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கேரக்டரில் கமல் நடிக்கவுள்ளார். இந்த பெயர் தேவர் மகன் சக்திவேலையும் நாயகன் பட வேலு நாயக்கரையும் நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

கமல் ரசிகர்களுக்கு தக் லைஃப் டைட்டில் டீசர் செம்ம ஹைப் கொடுத்தாலும், இன்னொரு தரப்பினர் தங்களது விமர்சனங்களையும் ட்ரோல்களையும் முன்வைத்து வருகின்றனர். அதாவது கமல் மீண்டும் ஜாதி பெயரில் நடிப்பதை பலரும் ஏற்கவில்லை. அதேபோல், ப்ளூ சட்டை மாறனும் தனது பங்கிற்கு தக் லைஃப் டைட்டிலையும் கமல்ஹாசனையும் பழைய சாக்கு மூட்டையில் கட்டி வைத்து கலாய்த்துள்ளார்.

அதாவது, “விக்ரம் படத்தை ஹிட்டாக்குனதால நல்ல படங்கள்ல நடிச்ச இவரும் இப்ப கத்தி, துப்பாக்கி, போதைப் பொருள், ஆத்தா, அம்மான்னு கெளம்பிட்டாரு. தேவர் மகன்ல அருவாளை கீழ போட்டுட்டு படிக்க போங்கடான்னு சொன்னவரு, இப்ப சாக்குமூட்டையை தலைல சுத்திக்கிட்டு கேங்க்ஸ்டர் ஆகிட்டாரு டோய்” என கலாய்த்துள்ளார்.

மற்றொரு பதிவில், “ஓ… ஜாதி வேற இருக்கா? ரைட்டு..” என ஒரே வரியில் போட்டுத் தாக்கியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவுக்கு உலக நாயகன் ரசிகர்கள் உலக்கையை தூக்கிக்கொண்டு வந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஜினி, விஜய் என வம்பிழுத்து வந்த ப்ளூ சட்டை மாறன் கைகளில் இப்போது உலகநாயகன் கமல்ஹாசனும் கைதாகி நிற்பது நெட்டிசன்களுக்கு குதூகலமாக அமைந்துள்ளது.

Chella

Next Post

நாடு முழுவதும் நவம்பர் 30-ம் தேதி வரை... ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு மத்திய அரசு செம அறிவிப்பு...!

Tue Nov 7 , 2023
நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் இயக்கம் 2.0 இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 100 நகரங்களில் 500 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ‘வாழ்க்கையை எளிதாக்கும் வகையில்’ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை (டி.எல்.சி) அதாவது ஜீவன் பிரமாணைப் பரவலாக ஊக்குவித்து வருகிறது. 2014-ம் ஆண்டில், பயோமெட்ரிக் கருவிகளைப் பயன்படுத்தி டி.எல்.சி.களை சமர்ப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதனைத் […]

You May Like