அதிமுக ஆட்சியில் கடந்த 2014ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறைக்கு எதிரான தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வழக்கமான பட்டியலில், பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என கூறியது.
மேலும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு திங்கட்கிழமைக்கு பதிலாக புதன்கிழமை விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.