fbpx

பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!. மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி!. கேரளாவில் சோகம்!

Accident: கேரளாவில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் லட்சத்தீவை சேர்ந்த முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் 7 பேர் காரில் சென்றுக்கொண்டிருந்தனர். இரவு 10 மணி அளவில்களர்கோடு அருகே சென்றுக்கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் லட்சத்தீவை சேர்ந்த தேவானந்தன், முகமது இப்ராகிம், ஆயுஸ் ஷாஜி, ஸ்ரீதீப் வல்சன், முகமது ஜாப்பர் ஆகிய 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், படுகாயமடைந்த மேலும் 2 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்தில் பேருந்து பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பேருந்து மற்றும் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Readmore: குளிர்காலத்தில் வெந்நீர் குளியல் பாதுகாப்பானதா?. மாரடைப்பு அபாயம்!. இந்த தவறை செய்யாதீர்கள்!.

English Summary

Bus-car head-on collision accident!. 5 medical students killed! Tragedy in Kerala!

Kokila

Next Post

நாடு முழுவதும் 43,168 எத்தனால் கலந்த பெட்ரோல் நிலையங்கள்...! மத்திய அரசு தகவல்

Tue Dec 3 , 2024
43,168 ethanol-blended petrol stations across the country

You May Like