fbpx

இஞ்சி ஜூஸ் குடித்தால், மூட்டு வலி குணமாகுமா….?

நாம் சமையலில் பயன்படுத்தும் ஒரு இன்றியமையாத பொருளாக இஞ்சி இருக்கிறது. எந்த ஒரு சமையலிலும், இஞ்சி சேர்த்தால், அந்த பொருள் அவ்வளவு எளிதில் கெட்டுப் போகாது. அதோடு, வீடுகளில் நாம் பயன்படுத்தும் இஞ்சி மூலிகையாகவும் இருக்கிறது. அதோடு, பல்வேறு நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. இஞ்சியை, சாறு பிழிந்து, ஜூஸாக சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு வழங்கும்.

இஞ்சியில் இருந்து சாறு எடுத்து, அதில் சற்றே, எலுமிச்சை சாறு, தேன் போன்றவற்றை சேர்த்து, தயார் செய்ய வேண்டும். இஞ்சி ஜூஸ் சாப்பிடுவதால், இருமல், சளி மற்றும் செரிமான கோளாறுகள் போன்றவை சரியாக வாய்ப்பு இருக்கிறது.

அவ்வப்போது, இஞ்சி ஜூஸ் சாப்பிட்டு வந்தால், மூளையில் புரோட்டின் அளவு அதிகரிக்கும் என்றும், இதன் காரணமாக, மூளையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த இஞ்சியில் இருக்கின்ற ஆன்ட்டிபயாட்டிக் தம்மை, ரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவை வெகுவாக குறைக்கின்றது. இஞ்சி ஜூஸ் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி வெகுவாக குறையும் என்று சொல்லப்படுகிறது.

இந்த இஞ்சை சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கின்ற கொழுப்புகளை குறைத்து, இதய ஆரோக்கியத்தை நலமாக வைத்திருக்கும். இந்த இஞ்சியில் இருக்கின்ற, ஜின் ஜெரால்கள் பாராட்டோல்கள் போன்றவை புற்றுநோய் செல்களில் ஏற்படும் வளர்ச்சியை தடுக்க உதவிகரமாக இருக்கும்.

Next Post

”தமிழ்நாட்டிலும் நிஃபா வைரஸ் நுழைந்துவிட்டதா”..? தீவிர கண்காணிப்பு..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!!

Wed Sep 13 , 2023
நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கேரளாவில் நிஃபா வைரஸ் தொற்று உள்ளதாகவும் அந்த நோய் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் சோதனை நடத்தப்படும் என்றும் தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் நிஃபா வைரஸ் தொற்று இதுவரை இல்லாத சூழ்நிலையில், அதை தடுக்க தமிழ்நாடு அரசு […]

You May Like