கோடை காலம் வந்து விட்டாலே, நம்முடைய உடலில் இருக்கும் சூட்டை தணிப்பதற்கு இன்றளவும் கிராமத்தில் இருக்கும் பலர் விரும்பி சாப்பிடுவது இளநீர்தான். அந்த இளநீரில் நம்மைப் பொறுத்தவரையில் சூட்டை தணிக்கும் தன்மை இருக்கிறது என்பது மட்டும்தான் நமக்கு தெரியும். ஆனால் அதில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த இளநீர் சாப்பிடுவது வெறும் தாகத்திற்காகவும், சூட்டை தணிப்பதற்காகவும் மட்டும் அல்ல, இந்த இளநீரில் நம்முடைய உடலுக்கு தேவைப்படும் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. தற்போது இந்த இளநீரில் என்னென்ன விதமான சத்துக்கள் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
வெயில் காலங்களில் இந்த இளநீரை நாம் பருகுவதால், நம்முடைய உடலில் சூடு தணிந்து, குளிர்ச்சியான தன்மை ஏற்படும். அதே போல முகத்தில் ஏற்படும் பருக்கள் குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த இளநீரால், வயிற்றுக்குள் ஏற்படும் புண் குணமாகும் என்று சொல்லப்படுகிறது.
கோடை காலங்களில் உடலில் ஏற்படும் வறட்சியையும் இது கட்டுப்படுத்துகிறது. அதேபோல, சிறுநீர் எரிச்சலும், இளநீர் சாப்பிடுவதால், குறையும் என்று கூறப்படுகிறது. அதேபோல, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களும் இந்த இளநீர் சாப்பிடுவதால் நீங்கும் என்று தெரிகிறது. அதோடு, இந்த இளநீரை நாள்தோறும் பருகி வந்தால், சிறுநீர் வழியாக உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியேறி, எப்போதும் உடல் தூய்மையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.