fbpx

தமிழகமே வந்தது அலர்ட்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் டிசம்பர் 3-ம் தேதி புயல் உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் டிசம்பர் 4-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மிக கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் வரும் 5-ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புயல் எச்சரிக்கை எதிரொலியாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, தேனி, புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

கட்டணம் குறைப்பு...!அடுக்குமாடி குடியிருப்புகள், பிளாட்டில் வசிப்பவர்களுக்கு மட்டுமே...! தமிழக அரசு மாஸ் அறிவிப்பு..‌!

Sat Dec 2 , 2023
அடுக்குமாடி குடியிருப்புகள், பிளாட், வில்லாவுக்கு பத்திரம் பதிவு செய்ய முத்திரை தீர்வை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர், இடத்தை விலைக்கு வாங்கி, குடியிருப்பு கட்ட திட்டமிட்டு, அதன்பின் வாங்க வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்வது வழக்கம். குடியிருப்பு வாங்க முன்வருவோரின் பெயர்களில் பத்திரப்பதிவு செய்யும்போது, நிலத்தின் பிரிக்கப்படாத பாக மனைக்கான கிரைய பத்திரம் மற்றும் கட்டுமான ஒப்பந்த ஆவணம் ஆகியவை […]

You May Like