தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் இருந்து நாள்தோறும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதனை பலரும் படித்து, தெரிந்து கொண்டு, அதன் மூலமாக பலனடைந்து வருகிறார்கள்.
அந்த வகையில், இன்று சென்னையில், சமூக பாதுகாப்பு துறையில் தற்சமயம் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில், இரண்டு காலி பணியிடங்களை கொண்ட ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்துதல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதோடு, இந்த பணியில் சேர விருப்பம் இருப்பவர்கள், தங்களுடைய விண்ணப்பத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் செய்தவர்கள் தேர்வின் மூலமாக பணியில் இணைக்கப்படுவார்கள்.
இணையதள விண்ணப்பம் இன்று முதல் வரும் 15ஆம் தேதி பெறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள cms.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக நீங்கள் டவுன்லோட் செய்து தெரிந்து கொள்ளலாம்.
நேர்காணல் அடிப்படையில், சென்னை சமூக பாதுகாப்பு துறை தேர்வு செய்முறை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதி – விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: இதற்கான வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்வதற்கு, அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம்– 20000
காலிப்பணியிடங்கள்-2