நாகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசிய போது, நாகை மாவட்டத்திற்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், நாகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் ரூ.2 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். நாகையில் புதுமைப் பெண் திட்டம் மூலம் 7,469 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. நாகை மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார். தொடர்ந்து நாகை மாவட்டத்திற்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
6 முக்கிய அறிவிப்புகள் :
* வேதாரணியம் மற்றும் தலைஞாயிறு பகுதிகளில் இருக்கிற இளைஞர்களுக்கு குறிப்பாக, பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில், தெனடார் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் 250 கோடி ரூபாய் செலவில் புதிய சிப்கார்ட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். காவேரி டெல்டா பகுதியில் அனுமதிக்கத்தக்க தகுந்த வேலைவாய்ப்புகள் அளிக்கக்கூடிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.
* விழுந்தமாவடி, வானவன் மகாதேவி மற்றும் காமேஸ்வரம் ஆகிய மீனவ கிராமங்களில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.
* ரூ.250 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். நாகை நகராட்சி கட்டடம் ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்படும்.
* நாகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது.
* சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும்.
* தெற்குபொய்கைநல்லூர், கோடியக்கரையில் 3 பல்நோக்கு பேரிடர் மையங்கள் கட்டப்படும்.
தொடர்ந்து மீனவர்கள் விவகாரம் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இலங்கை கடற்படையின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு பார்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 3,656 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது” என்றார்.
Read more:7 முறை கருக்கலைப்பு..!! பாலியல் குற்றவாளி சீமானை தப்பவிடாதே..!! சென்னையில் பரபரப்பு போஸ்டர்கள்..!!