fbpx

பிரதமர் மோடியை சந்திக்க இன்று மாலை 5.10 மணிக்கு டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின்…!

இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான மொத்த செலவான ரூ.63,246 கோடியில், மாநில அரசின் பங்கு ரூ.22,228 கோடியாகும், மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடியாகும். மீதமுள்ள நிதியான ரூ.33,593 கோடி வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நிதிச்சுமையை தவிர்க்கும் வகையில், மத்திய அரசின் பங்கு நிதியை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து தமிழக அரசு கோரிக்கை வைத்து வருகிறது.

இந்தச் நிலையில், அமெரிக்கா சென்று கடந்த செப்டம்பர் 14-ம் தேதி சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், கல்வி மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன் என்றார். இதையடுத்து, பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கோரப்பட்டது. நாளை நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரடியாக சந்திக்க உள்ளார்.

இன்று மாலை 5.10 மணிக்கு சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இரவு, டெல்லியில், தமிழக எம்பிக்கள் அவரை வரவேற்கின்றனர். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, பள்ளிக் கல்வி தொடர்பான நிதி, மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி, ஜிஎஸ்டி இழப்பீடு, பல்வேறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கான நிதி மற்றும் ஒப்புதல், மேகேதாட்டு, முல்லைப்பெரியாறு விவகாரங்கள் குறித்து மனு அளிப்பார் என சொல்லப்படுகிறது.

English Summary

Chief Minister Stalin will go to Delhi at 5.10 pm today to meet Prime Minister Modi

Vignesh

Next Post

எப்போதும் 20 வயது இளமை!. சீனர்கள் கடைபிடிக்கும் 7 பழக்கவழக்கங்கள்!

Thu Sep 26 , 2024
7 Healthy Habits of the Chinese That Can Make You Look 20 Years Younger: Take a Quick Look

You May Like