fbpx

ரூ.3 லட்சம்… 500 பேருக்கு முதல்வர் மருந்தகம் அமைக்க உரிமம்…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பித்தவர்களில் 340 பேருக்கும், கூட்டுறவுத் துறை மூலமாக விண்ணப்பித்தவர்களில் 500 பேருக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.08.2024 சுதந்திர தினவிழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்” என அறிவித்தார்கள். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் www.mudhalvarmarundhagam.tn.gov.in முதல்வர் என்ற மருந்தகம் இணையதளம் அமைக்க மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுவரை நேரடியாக விண்ணப்பித்தவர்களில் 340 பேருக்கும், கூட்டுறவுத் துறை மூலமாக விண்ணப்பித்தவர்களில் 500 பேருக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் இருந்தால், அதற்கான சான்றிதழ்களாக சொத்துவரி ரசீது அல்லது குடிநீர்வரி ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது சமர்ப்பிக்க வேண்டும். வாடகை இடமாக இருந்தால், இடத்துக்கான உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு, அரசு மானியம் ரூ.3.00 இலட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும். மருந்துகளாகவும் வழங்கப்படும். தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும். TABCEDCO, TAHDCO மற்றும் TAMCO பயனாளிகளும் இதில் விண்ணப்பிக்கலாம்.

English Summary

Chief Minister’s dispensary, 340 have been granted licenses

Vignesh

Next Post

"வாங்க கட்டிப்பிடிக்கலாம்"!. இன்று கட்டிப்பிடிப்பு தினம் 2025!. உங்கள் துணையை கட்டிப்பிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?.

Wed Feb 12 , 2025
"Let's hug"!. Today is Hug Day 2025!. Are there so many benefits to hugging your partner?.

You May Like