fbpx

நாடு முழுவதும் 8 மாநிலத்தில் புயல் ஆபத்துக் குறைப்பு திட்டம்… மத்திய அமைச்சர் தகவல்…!

தேசிய புயல் ஆபத்துக் குறைப்புத் திட்டம் 8 கடலோர மாநிலங்களில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது என நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

தேசிய புயல் ஆபத்துக் குறைப்புத் திட்டம் 8 கடலோர மாநிலங்களில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. முதல் கட்டத்தில் ஆந்திரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களிலும், இரண்டாம் கட்டத்தில் கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதன் கீழ் வழங்கப்பட்ட மொத்த நிதி ரூ. 3380.61 கோடியாகும். முதல் கட்டத்தில் ரூ. 1957.76 நிதியும் இரண்டாம் கட்டத்தில் ரூழ 1422.85 கோடி நிதியும் விடுவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை பராமரித்தல், நிலைத்திருக்கச் செய்யும் பொறுப்பு ஆகியவை மாநில அரசுகளிடம் உள்ளது. தேசிய புயல் ஆபத்துக் குறைப்புத் திட்டத்தின் கீழ், பல்நோக்கு புயல் பாதுகாப்பு முகாம்களின் செயல்பாட்டு நிலைத்தன்மைக்காக பதிவு செய்யப்பட்ட சங்கமாக புயல் பாதுகாப்பு மேலாண்மை குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீண்ட கால பராமரிப்புக்காக மாநில பட்ஜெட்டில் நிதியை ஒதுக்கவும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

English Summary

Cyclone Hazard Mitigation Project in 8 states across the country… Union Minister informs

Vignesh

Next Post

Tamil Nadu Forest Department | தமிழ்நாடு வனத்துறையில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Wed Feb 5 , 2025
An employment notification has been issued to fill vacant posts in the Tamil Nadu Forest Department.

You May Like