fbpx

#சென்னை :பிறந்த குழந்தையை தனியே விட்டு தப்பி சென்ற தாய் இறந்த சோகம்…!

சென்னை மாநகர பகுதியில் எழும்பூரில் தாய் சேய் நல மருத்துவமனையில் சந்தியா என்ற 23 வயது பெண் மகப்பேறுக்காக அனுமதி பெற்றார். இந்த நிலையில் சென்ற வாரம் குழந்தை பிறந்ததை தொடர்ந்து தாய் சேய் இருவருமே மருத்துவமனையில் உள்ளே மருத்துவரின் கண்காணிப்பிலே இருந்து வந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து, இன்று அதிகாலை நேரத்தில் 3 மணியளவில் தனது குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தாய் மட்டும் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.தப்பி சென்ற நிலையில் திருவள்ளூர் பகுதியில் இருக்கும் இரயில் தண்டவாளத்தில் நடந்து கொண்டிருந்த போது , எதிர்பாரத விதமாக இரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இரயில் தண்டவாளத்தில் ஏதோ ஒரு பெண் இரயிலில் அடிபட்டு இறந்ததாக காவல்துறைக்கு தகவலின் கிடைத்ததன் பேரில், இரயில்வே காவல் துறையினர் விசாரணை செய்து வந்துள்ளனர். இதனிடையே, மருத்துவமனையில் இருந்த சந்தியா என்ற பெண் மாயமானதை தொடர்ந்து தகவலை அறிந்த மருத்துவர்கள், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். 

இதனையடுத்து நடந்த விசாரணையில், மருத்துவமனையில் மாயமான சந்தியா தான் இரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அத்துடன் பெண்ணின் உடலை மீட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Baskar

Next Post

#Bigg boss : சக பெண் போட்டியாளர்கள் குளிக்கும் இடத்தில் அமுதவாணன் செய்த செயல்..!

Sun Nov 27 , 2022
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இந்த வருடத்தின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. போட்டியாளர்களில் ஒருவரான அமுதவாணன் என்பவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் மற்றும் நடன நிகழ்ச்சிகளிலும் பிரபலமானவராக இருந்தவர். இதனையடுத்து பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ என்ற திரை படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிக் பாஸில் […]

You May Like