6 முதல் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கான நீதி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தினசரி பாடவேளையை பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்து அளித்து வருகிறது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வியை பெறுவதற்கு முக்கிய பாடமாக அறிவியல், கணக்கு பயன்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு விளையாட்டு, நீதிநெறி வகுப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 6 முதல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் தொடங்கியது.
இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான பாடவேளைகள் குறித்த தகவல்களை பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி இருக்கின்றன. அதில் 6 முதல், 10-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாட வேளைகள் குறைக்கப்பட்டு உள்ளன. வாரத்திற்கு 7 பாடவேளைகள் என்று இருந்ததை, 6 பாட வேளைகளாக குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதலாக ஒரு பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு நீதி போதனைகள் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Also Read: Polytechnic மாணவ, மாணவிகளுக்கு ரூ.50,000 உதவித்தொகை...! உடனே விண்ணப்பிக்கவும்….! ஆட்சியர் அறிவிப்பு