நம்மில் அதிகமானோர் தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரையை பயன்படுத்துகின்றனர். இதுபோல தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கு தூக்க மாத்திரை இல்லாமல் தூக்கமே வராது என்ற நிலை ஒரு கட்டத்தில் ஏற்படும். எனவே தூக்கம் வரவில்லை என்றால் மாத்திரையை நாடுவதை விடுத்து கீழ்காணும் சில வழிமுறைகளை பின்பற்றி தூக்கம் வரவழைக்கலாம்.
தூக்கம் வராமல் போவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று யோசனை. நமக்கு வேலையிலோ அல்லது உடலிலோ ஏதாவது பிரச்சனை என்றால் அது பற்றி யோசித்துக் கொண்டே நமக்கு ஏதாவது ஆகிவிடுமா என்று பயந்து கொண்டு தூங்காமல் இருப்பார்கள். இவ்வளவு பயத்துடன் இருந்தால் நிச்சயம் நமக்கு தூக்கம் வராது. அடுத்தது சுற்றுப்புற சூழல். நான் தூங்குகின்ற இடம் தூக்கம் வராமல் இருக்க காரணமாக இருந்து விடக்கூடாது. எனவே நமது அறையை இருட்டாக்கி வைத்திருக்க வேண்டும்.
தூங்குவதற்கு முன்பாக எது வெதுப்பான நீரில் குளிப்பது தூக்கம் வர ஏதுவாக இருக்கும். தியானம் செய்வது தூக்கத்தை வரவழைக்கும். உடல் உழைப்பு குறைவாக இருந்தாலும் தூக்கம் வராது. எனவே பகலில் அதிகப்படியான உடல் உழைத்து வேலை செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் காலை மாலை வேலைகளில் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.
தூக்கம் வரவில்லையே என்று இரவு நேரத்தில் செல்போன் அல்லது கம்ப்யூட்டர் உபயோகிக்க கூடாது. காபி டீ போன்ற பானங்களை இரவு நேரத்தில் குடிக்க கூடாது.
மேலும் நமது தலையணை, பெட்ஷீட் ஆகியவை சுத்தமாக இல்லை என்றால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் நமக்கு அரிப்பு போன்ற தாக்கங்களை ஏற்படுத்துவதால் தூக்கம் வராமல் போகலாம். இந்த முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டு தூக்கம் வரவில்லை என்றால், சிந்தனையை கட்டுப்படுத்த ஐம்பதிலிருந்து ஒன்று வரை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருப்பது மனதை ஒருங்கிணைந்து தூக்கம் வர வழி வகை செய்யும்.