தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது இன்று 4வது நாளாக விவாதம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து பிரச்சனைகளை எதிகட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மார்ச் 17 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறுகிறது. மார்ச் 24 முதல் ஏப்ரல் 30 வரை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.
தமிழக சட்டப்பேரவை இன்று (மார்ச் 20) காலை 9.30 மணிக்கு கூடியது. இந்த நிலையில், சட்டப்பேரவை விதிகளை மீறி பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் நடந்து கொள்கிறார். தனக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறி சபா நாயகர் இருக்கைக்கு வந்து மிரட்டுவதாக சபாநாயகர் அப்பாவு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வேல் முருகன் ஒருமையில் பேசுவதையும், அமைச்சர்களை கை நீட்டி பேசுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் கூறுகையில், எம்.எல்.ஏ வேல் முருகன் பேச்சு இன்று அதிக பிரசங்கிதனமாக உள்ளது. விதிகளை மீறி சபாநாயகர் இருக்கை அருகே வரக்கூடாது எனக்கூறியும் வேல்முருகன் கேட்கவில்லை.. தனது தவறுகளை திருத்திக் கொள்ளும் வகையில் வேல் முருகன் மீது நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து வேல் முருகனை மன்னிப்பதாக அப்பாவு தெரிவித்ததால் பிரச்சனை முடிவுக்கு வந்தது. திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை பண்ரூட்டி தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேரவையில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, அமைச்சர் சேகர் பாபு என்னை ஒருமையில் பேசுகிறார். உனக்கு என்ன தெரியும் என நக்கலாக பேசுகிறார். அவர் அதிமுகவில் இருந்து வந்தவர். தற்போதும் அதிமுக அமைச்சர்களுடன் நெருக்கமாக பேசி வருகிறார். திமுக அமைச்சரவையில் இருந்து கொண்டு அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டினார்.