fbpx

“ஆளுநரை மிரட்டுகிறார்கள்.. திமுக திருடிய 8,500 கோடி பணத்தை திருப்பித் தர சபாநாயகர் கேட்கலாம்” – அப்பாவு உரைக்கு அண்ணாமலை பதிலடி.!

தமிழக அரசின் பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. அரசு மரபுப்படி ஆளுநர் உரை பின் சட்டசபை கூட்டங்கள் தொடங்கும். இந்நிலையில் தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி நிராகரித்தார். மேலும் 4 நிமிடங்கள் மட்டுமே உரை நிகழ்த்திய அவர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தார். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டம் தமிழ் தாய் வாழ்த்து உடன் துவங்கியது. இந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஆளுநர் சட்டப்பேரவை கூட்டங்கள் தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் தேசிய கீதத்துடன் முடிய வேண்டும் என தெரிவித்தார். மேலும் தமிழக அரசு செய்வதில் தனக்கு உடன்பாடில்லை எனக் கூறியவர் மாநில அரசு தயாரித்த உரையை பேசாமல் புறக்கணித்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவோ ஆளுநரின் உரையை வாசித்து சட்டப்பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு பேசியதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் அப்பாவு பயன்படுத்திய வார்த்தைகளை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை இதுபோன்று பேசுபவர்களை பதவியில் அமர்த்துவதற்கு முன் திமுக யோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு தயாரித்த உரையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் காட்டப்படும் பாரபட்சம் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருந்தது. இதனைப் பேச்சு வழக்கில் சட்டப்பேரவையில் வாசித்து காட்டினார் சபாநாயகர். இதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அண்ணாமலை அப்பாவும் எம்எல்ஏ பேசும் வார்த்தைகள் போன்ற இடத்தில் பேசுவதற்கு தகுதியானவை இல்லை. அவர் இஷ்டம் போல் மத்திய அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரதமரின் பிஎம் கேர் நிதி ஒளிவு மறைவின்றி அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. மேலும் தமிழக அரசு ஆளுநரை மிரட்டுவது போன்று செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசை குறை சொல்வதற்கு முன் திமுக அரசின் முதல் குடும்பம் ஊழல் செய்த பணத்தை திரும்ப நாட்டிற்கே தருமாறு அப்பாவு கேட்கலாம். இதன் மூலம் நமது மாநிலத்தின் கடனாக இருக்கும் 8,500 கோடியில் பெரும் பகுதியை திருப்பி செலுத்துவதற்கு உதவும் என தெரிவித்திருக்கிறார்.

Next Post

மக்களே எச்சரிக்கை.! புதிய வைரஸ்.! அடுத்த உயிர் கொல்லி நோய் 'அலாஸ்காபாக்ஸ்'.! 'Alaskapox' மரணத்தை விளைவிக்குமா.?

Mon Feb 12 , 2024
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாநிலத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலாஸ்காபாக்ஸ் நோயால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அலாஸ்காவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி பிற்பகுதியில், ஆங்கரேஜின் தெற்கே உள்ள கெனாய் தீபகற்பத்தில் வாழ்ந்த ஒரு முதியவர் இந்த நோயால் உயிரிழந்துள்ளார். அவருக்கு நோயெதிர்ப்பு குறைபாடு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா மாநிலத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஜூலியா ரோஜர்ஸ் கூறுகையில், “மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. ஆனால் விழிப்புடன் இருப்பது அவசியம். நாங்கள் […]

You May Like