fbpx

போதையில் 6 வயது பிஞ்சு மகன் கழுத்தில் மிதித்து கொலை.! கைதான தந்தையின் அதிர்ச்சி வாக்குமூலம்.!

குடிபோதையில் பெற்ற மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தந்தையை கைது செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கடுகானப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் மகன் இருந்தான். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மனைவி இறந்த நிலையில் சந்தோஷ் தனது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது மகனின் கழுத்தில் காலை வைத்து மிதித்து ஆறு வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்திருக்கிறார் சந்தோஷ்.

இது தொடர்பாக அக்கம்பக்கத்தினரால் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சந்தோஷை கைது செய்தனர். மேலும் இறந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையிடம் சந்தோஷ் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

இது தொடர்பாக காவல்துறை விசாரணையின் போது வாக்குமூலம் அளித்த சந்தோஷ் இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்ததாக வைத்திருக்கிறார். மேலும் தனது மகனை கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார். இதனைக் கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

Next Post

நாய்களை விட்டு கடிக்க வைத்து.! மகளின் காதலனுக்கு வரவேற்பு கொடுத்த கொடூர தந்தை.! வைரல் வீடியோ.!

Sun Dec 10 , 2023
பிரிட்டனைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளின் காதலன் அவரை சந்திப்பதற்காக வீட்டிற்கு வந்தபோது நாய்களை வைத்து கடிக்கச் செய்த கொடூர சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்தில் குடியேறிய இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தின் மூலமாக பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்துள்ளனர். #Britain #dog attack #cruel pic.twitter.com/uxdnssx7lK — daemon […]

You May Like