fbpx

Breaking: கனமழை காரணமாக கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை…!

கனமழை காரணமாக கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 28 ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 29 ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல், வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

English Summary

Due to heavy rain, schools are closed in Valparai, Coimbatore

Vignesh

Next Post

இன்று முதல் இந்த பாலின் விலை ரூ.2 உயர்வு..!

Wed Jun 26 , 2024
கர்நாடகா பால் கூட்டமைப்பு, அரசுக்கு சொந்தமான நந்தினி பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. மேலும், பாக்கெட்டில் உள்ள பால் அளவும் அதிகரித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது நந்தினி பிராண்ட்களின் பொருட்கள். நந்தினி பாலின் விலை 500 மில்லி லிட்டர் 22 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பால் 42 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளதாக கர்நாடக கூட்டுறவு […]

You May Like