fbpx

“எல்லாம் பொய்யா கோபால்.”? 4000 கோடி வடிகால் திட்டத்தை கொண்டு வந்தது யார்.? எடப்பாடி பழனிச்சாமி அதிரடி கேள்வி.!

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையினால் பெரும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்தப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போயிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையில் சென்னை நகரமே நீரில் மூழ்கி இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அதிமுகவின் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிச்சாமி ஆளும் திமுக அரசுக்கு எதிராக பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

4000 ரூபாய் கோடி ரூபாய் செலவில் மழைநீர் தேங்காாமல் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக வீர வசனம் பேசிய திமுக அமைச்சர்கள் எங்கே சென்று விட்டார்கள் என கேள்வி எழுப்பி இருக்கிறார். மக்கள் தொலைக்காட்சி மூலமாக சென்னை நகரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து பணிகளும் முடிந்து விட்டது என்றால் இவ்வளவு நீர் என் இத்தனை நாளாகியும் வடியாமல் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். சென்னை மாநகரமே இந்த கடும் மழையால் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனை தொலைக்காட்சிகள் மூலமாக தமிழகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

திட்டங்கள் ஒழுங்காக செயல்படுத்தப்பட்டால் இது போன்ற ஒரு இன்னலுக்கு பொதுமக்கள் ஆளாகி இருப்பார்களா.? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் சென்னைக்கு வடிகால் அமைப்பதற்கான திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக அரசு தான் என தெரிவித்த அவர் உலக வங்கியின் மூலமாக ஆசிய வளர்ச்சி வங்கிய இடம் நிதியை பெற்று நாங்கள் பணியை துவங்க இருந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. அதன் பிறகு வந்த திமுக அரசு டெண்டர் விட்டு இந்த பணிகளை செய்தது. பொது மக்களின் நலனில் அக்கறையில்லாமல் கமிஷன் அடிப்படையில் வேலை செய்தால் இப்படித்தான் இருக்கும்.

இந்தத் திட்டம் திமுக அரசு கொண்டு வந்ததல்ல எனது ஆட்சியில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. எதிர்பாராத விதமாக ஆட்சி மாற்றம் நடைபெற்றதால் எங்களால் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. பொதுமக்களின் நலனில் அக்கறை உள்ள அரசு கமிஷனை எதிர்பார்த்து வேலை செய்யாது. இதனை தொலைக்காட்சி மூலமாக பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் உணர வேண்டும் என தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Next Post

சென்னை வெள்ள பாதிப்பு..!! ரூ.561.29 கோடி விடுவிப்பு..!! மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு..!!

Thu Dec 7 , 2023
மழை நீருடன் சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள 3-வது பெரிய வெள்ளத்தை சென்னை எதிர் கொள்வதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்காக ரூ.561.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை பேசின் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ள […]

You May Like