fbpx

போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் சிறுமிக்கு ஏற்ப்பட்ட விபரீதம்.!

சுகுமார் (32) என்ற நபரின் ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிளியனுார் பகுதியை வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சஞ்சனா என்ற 5 வயது மகள் உள்ளார். இச்சிறுமி தைலாபுரம் அரசு பள்ளியில், 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

சஞ்சனாவிற்கு கடந்த மாதம், 18-ம் தேதி உடல் நிலை சரியில்லாததால், கணேசன் என்பவரிடம் அழைத்துச் சென்றனர். அவர், சிகிச்சையளித்து சஞ்சனாவிற்கு ஊசி போட்டுள்ளார். அந்த ஊசி சிறுமிக்கு பக்க விளைவுகளை சஞ்சனாவிற்கு ஏற்படுத்தியுள்ளது.தோல் கறுப்பாக மாறி, தொற்று பரவியது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், சஞ்சனாவை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்ந்திருந்த நிலையில், அங்கு தொடர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை, 5.30 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதலில் சிகிச்சை அளித்தவர் தைலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (54), உப்புவேலுார் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலிய உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். விசாரணையில் இவர் போலி மருத்துவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் சஞ்சனா போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் உயிரிழந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலி மருத்துவர் தலைமறைவாகி விட்டார். அவரது மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டு போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகிறார்

Baskar

Next Post

சோனியா காந்தி அதிர்ச்சி..!! விதிமுறைகளை மீறிய ராஜீவ் காந்தி அறக்கட்டளை..!! மத்திய அரசு பரபரப்பு உத்தரவு..!!

Sun Oct 23 , 2022
வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை […]
சோனியா காந்தி அதிர்ச்சி..!! விதிமுறைகளை மீறிய ராஜீவ் காந்தி அறக்கட்டளை..!! மத்திய அரசு பரபரப்பு உத்தரவு..!!

You May Like