fbpx

மருமகனுடன் உல்லாசம்..!! ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய முன்னாள் காதலன்..!! கோபத்தில் பெண் செய்த சம்பவம்..!!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த முன்னாள் காதலனை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் நகரில் வசித்து வரும் பிரியங்கா நிஷாத் என்பவரின் உறவினர் பிரிஜேந்திர நிஷாத். பிரியங்காவுக்கு அவருடைய மருமகன் உறவு முறை கொண்ட பிரிஜேந்திரா உடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, பிரியங்காவுக்கு சிந்து குமார் என்ற முன்னாள் காதலர் ஒருவரும் இருந்துள்ளார். இந்நிலையில், பிரியங்கா – பிரிஜேந்திர நிஷாத் ஆகிய இருவரின் உறவு குறித்து முன்னாள் காதலனுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த சிந்து குமார், பிரியாவுடன் எடுத்துக் கொண்ட ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி பிரியங்காவை மிரட்டி, தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளார் சிந்து குமார். இதனால் சிந்து கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கிறார் என்பதை உணர்ந்த பிரியங்கா சென்னையில் இருந்து சிந்துவை சில நாட்களுக்கு முன்பே ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார்.

இதனை நம்பி பெங்களூருக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு அவரும் காதலியை பார்க்க கோரக்பூர் சென்றுள்ளார். பின்னர் பிரிஜேந்திரா, ஆகாஷ் குமார் மற்றும் சிவக்குமார் ஆகியோருடன் சேர்ந்து பிரியங்கா முன்னாள் காதலன் சிந்து குமாரை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார். இதில் சிந்து உயிரிழந்த நிலையில், அவருடைய உடலை குளத்தில் வீசியுள்ளனர். இதையடுத்து, அந்த குளத்தில் வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சிந்து குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்கில் பிரியங்கா, அவருடைய கள்ளக்காதலன் பிரிஜேந்திர நிஷாத் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More : KGF – 3..!! மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குநர் பிரஷாந்த் நீல்..!! வெறித்தனமா இருக்கப்போகுது..!!

English Summary

4 people were arrested and jailed, including the woman who killed her ex-boyfriend by drawing a sketch to prevent him from committing adultery.

Chella

Next Post

கள்ளச்சாராய மரணம்..!! உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் எதற்கு..? சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

Fri Jul 5 , 2024
On what basis was compensation of Rs.10 lakh given to the families of those who died after drinking liquor in Karunapuram village of Kallakurichi district..? As the Madras High Court has questioned.

You May Like