மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுமி அனீஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட புதுச்சேரிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அனீஷா, தாங்கள் தங்கி இருந்த விட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனது மகளை எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, புதுச்சேரி கடற்கரையில் மிகவும் பலவீனமான நிலையில் சிறுமி முனங்கியவாறு கிடந்துள்ளார். அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, அவர் காஜா மொஹிதீன் என்ற நபர் ஓட்டிச் சென்ற ஆட்டோவில் ஏறியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில், ஆட்டோ டிரைவரான காஜா மொஹிதீன், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், சிறுமியை ஆரோவில் கடற்கரையில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர், சிறுமி தனது நண்பரை சந்திக்க விரும்பியுள்ளார். இதனால் அவர் சென்னைக்கு சென்று கொண்டிருந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவிடம் லிப்ட் கேட்டுள்ளார். ஆனால், அந்த குழு சிறுமியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இரண்டு நாட்கள் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு, பின்னர் புதுச்சேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப கலைஞர், ஒடிசாவைச் சேர்ந்த இருவர் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Read More: சந்திரமுகி பட பொம்மியா இது? ஷாக்கில் ரசிகர்கள்… வைரலாகும் புகைப்படம்..