நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான (WFH) புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது..
மத்திய வர்த்தக அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை ஒரு சிறப்பு பொருளாதார மண்டல பிரிவில் அதிகபட்சமாக ஒரு வருட காலத்திற்கு அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.. அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் (SEZs) நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான வீட்டில் இருந்து வேலை செய்யும் கொள்கைக்கான ஏற்பாடுகளைச் செய்ய தொழில்துறையினரின் கோரிக்கையின் பேரில் விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய விதியானது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை வழங்குகிறது.
மொத்த ஊழியர்களில் அதிகபட்சமாக 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைக்கு அனுமதிக்கப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. அதிகபட்சமாக ஓராண்டு வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.