தமிழ்நாடு நிலா ஒருங்கிணைப்பு சட்டம் 2023க்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இந்த சட்ட மசோதாவை வருவாய்த்துறை அமைச்சர் தாக்கல் செய்தார். அன்றைக்கே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேறியது. பிறகு தமிழ்நாடு ஆளுநரிடம் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இங்த சட்ட மோசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதலளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 17ல் தமிழக அரசின் அரசிதழில் இந்த சட்டமானது அமலுக்கு வந்து இருக்கிறது.
இந்த சட்டத்தால் குறிப்பாக நீர் நிலைகள், நீர் ஓடைகள் இருக்கக்கூடிய பகுதிகளில் சுமார் 100 ஹெக்டர் நிலப்பரிப்பில் அரசின் சிறப்பு திட்டங்களை நிறைவேற்ற அந்த நிலத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று இந்த நில ஒருங்கிணைப்பு சிறப்பு சட்டத்தில் வழிதல்கள் செய்யப்படுகிறது. இந்த சட்டமசோதா `நிலம், நீர்நிலைகள், நீரோடைகள், ஏரி குளங்களை சிறப்பு திட்டங்கள் எனும் பெயரில் தனியார் பெரு நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமாகத் தாரைவார்க்கும் திட்டம்’ எனக் குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள். இதற்கு தமிழக அரசு சார்பில் நீர்நிலைகளை பாதுகாக்க இதில் வழிவகைகள் இருக்கின்றன என்று தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக ஆளுநர் மீது, 13 சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார் என்று குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் தற்போது இந்த நில ஒருங்கிணைப்பு சிறப்பு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதை, தேவையான மசோதாவிற்கு ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆளுநர் ஒப்புதல் தருகிறார் என்ற கருத்தும் கூறப்படுகிறது.