தருமபுரி மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னை ஆணையர் கடிதத்தின்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் 22.03.2025 தண்ணீர் தினத்தன்று நடைப்பெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் 23.03.2025 அன்று நடைபெற இருந்தது. மேலும், 23.03.2025 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், கலைஞர் கனவு இல்ல பயனாளிகளை தேர்வு செய்தல், அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் போன்ற பணிகளை இறுதி செய்து கிராம சபையில் தீர்மானமாக வைப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், நிர்வாக காரணங்களாலும் 23.03.2025 -க்கு பதிலாக 29.03.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது.
அனைத்து ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்பொருட்டும். ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தை நடத்த ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குநர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
22.03.2025 தண்ணீர் தினத்தன்று நடைப்பெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் 29.03.2025 அன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம்; உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல். சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த தீர்மானங்கள் விவாதித்தல்., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் குறித்து விவாதித்தல், தொழுநோய் விழிப்புணர்வு குறித்து விவாதித்தல். இதர பொருள்கள் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பொருள்கள் கிராமசபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.