பெரும்பாலும் நாம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் பல்வேறு காய்கறிகளிலும், பலவிதமான நன்மைகள் இருக்கிறது. ஆனால், பலர் சில காய்கறிகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் அந்த காய்கறிகளை சேர்த்தாலும், அந்த காய்கறிகளை நீக்கிவிட்டு, வெறும் குழம்பை மட்டும் சாப்பிடும் பழக்கம் இன்னமும் இருந்து வருகிறது.
இப்படி, நம்முடைய ஆரோக்கிய உணவுகளை மறந்து, பல துரித உணவுகளுக்கு மாறியதன் காரணமாக தான், இன்று நோய்கள் அதிகரித்து, அனைவரும் மருத்துவமனையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில், இன்று முள்ளங்கியை சாப்பிடுவதால், உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
இந்த முள்ளங்கியில், விட்டமின் பி, விட்டமின் சி, விட்டமின் கே மற்றும் பொட்டாசியம், நார்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதயத்தை இந்த முள்ளங்கி பலமாக வைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. முள்ளங்கி உட்கொள்வதால், ரத்த அழுத்தம் சீராகும் என்று சொல்லப்படுகிறது.
இந்த முள்ளங்கி, இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கும் என்றும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் நம்முடைய உடலுக்கு தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய விட்டமின் சி சத்து முள்ளங்கியில் இருக்கிறது. இதனை உட்கொள்வதால், பசி அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதோடு, இந்த முள்ளங்கியை உட்கொள்வதால், செரிமான மண்டலம் வலுவாகி, உணவு எளிதில் ஜீரணமாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கழிவுகளை நீக்கி, குடலை சுத்தம் செய்யும்.
இந்த முள்ளங்கியை தொடர்ந்து, சாப்பிட்டு வருவதால், கல்லீரலில் இருக்கின்ற கழிவுகள் வெளியாகி, உடல் சுத்தமாகிறது. முள்ளங்கியை தொடர்ந்து, சாப்பிட்டு வருவதால், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவை ஆரோக்கியமாக காணப்படும்.