fbpx

வாவ்.! தினமும் வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீர் குடிச்சா என்னாகும்.! இவ்வளவு நன்மைகள் இருக்கா.?

வெண்டைக்காய் உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. இந்தக் காயில் இரும்பு சத்து, நார்ச்சத்து, புரதம், மக்னீசியம், மாங்கனிசு, வைட்டமின்கள் மற்றும் போலேட் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. வெண்டைக்காயை சமைத்து சாப்பிடுவதை விட அதை ஊற வைத்த தண்ணீரை தினமும் குடித்து வருவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வெண்டைக்காயில் இருக்கும் அனைத்து சத்துக்களும் முழுமையாக கிடைக்கும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் ஊற வைத்து தண்ணீரை வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வெறும் வயிற்றில் வெண்டைக்காய் நீரை குடிக்கும் போது கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்படுகிறது. மேலும் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றவும் உதவுகிறது. வெண்டைக்காய் அதிகமான நார்ச்சத்துக்களை கொண்டது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெண்டைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கிறது. வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தையும் காக்கிறது. வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு சரும ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஊறவைத்த வெண்டைக்காய் நீர் நரம்பு மண்டலத்தை சீர்படுத்தி மூளை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சிக்கு உதவுவதோடு புற்று நோய்க்கு எதிரான தன்மையையும் கொண்டிருக்கிறது.

Next Post

தங்கத்திற்கு ஏன் இவ்வளவு மதிப்புன்னு தெரியுமா.? பூமியில் எவ்வளவு தங்கம் இருக்கு.? ஆச்சரியமான உண்மை.!

Sun Dec 24 , 2023
உலோகங்களிலேயே அதிக விலை மதிப்பு மிக்கது தங்கம். தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை 5875 ரூபாயாக இருக்கிறது. தங்கமும் இரும்பு, அலுமினியம், பித்தளை, செம்பு, வெள்ளி இவற்றைப் போன்ற ஒரு உலோகம் தான். எனினும் தங்கம் மட்டும் ஏன் இவ்வளவு விலைமதிப்பு மிக்கதாக இருக்கிறது என்று யோசித்து இருக்கிறோமா.? வாங்க அதற்கான காரணம் என்ன […]

You May Like