fbpx

சென்னையில் மீண்டும் கனமழை… பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா…? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!

சென்னை மாவட்டத்தில் இன்று (அக். 18) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியில் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது.

இன்று வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 20, 21-ம் தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி,திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மந்தைவெளி, அடையாறு, வடபழனி, OMR சாலை, கிண்டி, சோழிங்கநல்லூர், அசோக் நகர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று வெயில் அடித்த நிலையில் இன்று மீண்டும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் இன்று (அக். 18) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

English Summary

Heavy rain again in Chennai… School, colleges holiday…? Notification of District Collector

Vignesh

Next Post

டீயை மீண்டும் சூடுப்படுத்தி குடிக்கிறீர்களா?. புற்றுநோய் வருமாம்?. நிபுணர்கள் கூறுவது என்ன?

Fri Oct 18 , 2024
Does Reheating Cold Tea Cause Cancer? Experts Weigh In

You May Like