fbpx

நாளை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், ஜனவரி 15,16, 18 மற்றும் ஜன.19 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான ஜன.17 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அக்கோரிக்கைகளை ஏற்று, தமிழக முதலவர் ஸ்டாலின், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜன.25 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.

English Summary

Holiday for schools and colleges across Tamil Nadu tomorrow

Vignesh

Next Post

முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - ஹமாஸ் போர்!. 1650 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஒப்புதல்!. காஸாவில் மக்களுக்கு நிம்மதி!

Thu Jan 16 , 2025
Israel - Hamas war ends!. Approval to release 1650 Palestinian prisoners!. Relief for the people in Gaza!

You May Like