சேலம் மாவட்ட பகுதியில் உள்ள கும்மிப்பாடியில் சின்னகவுண்டரின் மகன் சிவக்குமார்(40) என்பவர் படுகாயமடைந்த நிலையில், நேற்றைய முன்தினத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வந்துள்ளார். இதனிடையில் நேற்று மாலை சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விசாரணையை குறித்து காவல்துறையினர் கூறியதாவது சிவக்குமாருக்கும் மற்றும் அதேபகுதியில் வசிக்கும் மாணிக்கத்தின் மனைவி புஷ்பாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இதனை பற்றி அறிந்த மாணிக்கம், சிவக்குமாரிடம் பலமுறை கண்டித்து இருக்கிறார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் கடந்த, 9ம் தேதி அன்று இரவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தில் மாணிக்கம் மற்றும் மகன் தங்கராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து சிவக்குமாரை அரிவாளால் வெட்டி இரும்பு கம்பியால் பயங்கரமாக தாக்கியுள்ளார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.