fbpx

தூள்…! 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு…! மதிய உணவு சமைக்க உணவூட்டுச் செலவினம் உயர்வு…!!

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி , 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ .2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி , தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ.1.33 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் ரூ,0.46 எனவும், எரிபொருளுக்கான செலவினம் ரூ.0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . உணவூட்டுச் செலவினம் தற்போது வழங்கப்பட்டு வருவது மற்றும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

100 நாள் வேலை திட்ட அட்டையோடு ஆதாரை இணைக்காத 11 கோடி பேரின் வேலை அட்டைகள் ரத்து...!

Fri Feb 2 , 2024
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் ‘ இடைக்கால பட்ஜெட் ‘ முழுக்க முழுக்க பொய்களைக்கொண்டு கோர்க்கப்பட்டிருக்கிறது என எம்.பி திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; 28 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட் உரையை இன்று நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் மக்களவையில் படித்தார். 24 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட்டின் முதல் பகுதி முழுவதும் கடந்த ஐந்தாண்டு கால பாஜக அரசின் சாதனைகள் எனப் […]

You May Like