fbpx

24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதித்த நபர்களின் எண்ணிக்கை….? மத்திய அரசு வெளியிட்ட விவரம்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 18,738 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 40 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 19,998 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,41,45,732 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,34,84,110 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,26,689 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,06,21,79,411 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,58,617 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Vignesh

Next Post

விண்ணில் சீறிப்பாய்ந்த இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட்..! ஆனால், ஒரு சிக்கல்..!

Sun Aug 7 , 2022
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுண்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு துவங்கிய நிலையில், இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த எஸ்எஸ்எல்வி- டி1 ராக்கெட் இஓஎஸ் 02, ஆசாதிசாட் என்கிற இரண்டு எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து […]
SSLV ராக்கெட் மிஷன் தோல்வி..! இனி எந்த பயனும் இல்லை..! இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

You May Like