fbpx

அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 72 பேர் உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 12,608 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 72 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,040 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன..

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,42,98,864 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,36,70,315 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,27,206 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,08,95,79,722 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,64,471 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பிரேக் வேலை செய்யவில்லை எனில்.. காரை எப்படி நிறுவத்துவது..? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ்...

Thu Aug 18 , 2022
சாலையில் சென்று கொண்டிருக்கும் கார் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? இது போன்ற நிலை யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். கார் பிரேக் வேலை செய்யவில்லை எனில் என்ன செய்வது என்று தெரிந்த கார் டிரைவர்கள் மிக மிகக் குறைவு. பெரும்பாலான மக்கள் பதற்றமடைவார்கள், இதன் விளைவாக, மோசமான விபத்து நடக்கலாம். அதனால்தான், ஓடும் காரின் பிரேக் பழுதாகிவிட்டால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.. […]

You May Like