fbpx

இந்தியாவில் 6,298 பேருக்கு கொரோனா பாதிப்பு…! மொத்தம் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 6,298 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 23 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,916 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,45,22,777 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,39,47,756 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,250 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,16,17,78,020 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,61,896 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

புதிய தலைமைச் செயலகத்திற்கு அம்பேத்கர் பெயர்..! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

Fri Sep 16 , 2022
தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட உள்ளதாக முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில், புதிய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சூட்டக்கோரி தெலங்கானா சட்டசபையில் தீர்மானம் […]
புதிய தலைமைச் செயலகத்திற்கு அம்பேத்கர் பெயர்..! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

You May Like