இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடங்கி உள்ளது.
கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த டி.ஆர்.எஃப் என்ற அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும், சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம், வாகா அட்டாரி எல்லை மூடல் உள்ளிட்ட முடிவுகளை இந்தியா அறிவித்தது.
இந்தியாவின் இந்த முடிவுக்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்து வருகிறது. சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை உள்ளிட்ட முடிவுகளை அறிவித்துள்ளது. மேலும் இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது போரை தொடங்குவதற்கான நடவடிக்கை என்றும் பாகிஸ்தான் கூறியது.
மேலும் எல்லைப்பகுதியில் இந்தியா – பாகிஸ்தான் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இன்னும் சிலரோ போர் நடைபெற வாய்ப்பில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது போர் தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பாகிஸ்தானின் அச்சுறுத்தல்கள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடங்கி உள்ளது. ஒருவேளை இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் பட்சத்தில், இரு நாடுகளும் மற்றொன்றின் மீது அணுகுண்டை வீசினால் என்ன நடக்கும்? இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள எந்த முக்கிய நகரங்கள் அணு குண்டுவீச்சால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன?
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் இன்று நேற்று தொடங்கியது இல்லை. இந்த பதற்றத்தின் வரலாறு நீண்ட காலமாக இருந்து வருகிறது, மேலும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு அது மேலும் மோசமடைந்துள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடித்தால், நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் உள்ள பல நகரங்கள் பாகிஸ்தானின் அணு ஆயுதத் தாக்குதலின் எல்லைக்குள் உள்ளன. இருப்பினும், சில நகரங்கள் அவற்றின் புவியியல், இராணுவ மற்றும் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக அணு ஆயுதத் தாக்குதலுக்கு அதிக ஆபத்தில் உள்ளன. இந்தியாவில் 172 அணு ஆயுதங்கள் உள்ளன என்றும் அதே நேரத்தில் பாகிஸ்தானிடம் 170 ஆயுதங்கள் உள்ளன என்றும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) 2024 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அணு ஆயுதங்கள் இந்த அச்சுறுத்தலை மேலும் அதிகரிக்கிறது. அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புகள் குறைவே என்றாலும், பாகிஸ்தான், இந்தியாவின் கட்டுப்பாட்டு அமைப்பை அழிக்க நினைத்தால் டெல்லி மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
டெல்லி மட்டுமின்றி, இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை மற்றும் பெங்களூரு ஆகியவை பாகிஸ்தானின் இலக்குகளாகவே இருக்கும். இந்தியாவின் நிதி தலைநகராகவும், அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் மும்பை உள்ளது.. அதன் துறைமுகங்கள் மற்றும் நிதி நிலை இதை ஒரு மூலோபாய இலக்காக ஆக்குகிறது.
அதே போல் பெங்களூரு தொழில்நுட்பம் மற்றும் இராணுவ ஆராய்ச்சிக்கான மையமாக இருப்பதால், பாகிஸ்தானின் அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காக இருக்கலாம். மேலும், குருகிராம், காஜியாபாத், அகமதாபாத், காந்திநகர், கான்பூர் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற நகரங்களும் அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள பல நகரங்கள் இந்தியாவால் குறிவைக்கப்படும். லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, ராவல்பிண்டி மற்றும் பெஷாவர் ஆகியவற்றை இந்தியா குறிவைக்கக்கூடும். இருப்பினும், அணு ஆயுத தாக்குதலால் நகரங்கள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல், கதிர்வீச்சு, உணவு நெருக்கடி மற்றும் சமூக குழப்பம் போன்ற நீண்டகால பிரச்சினைகளும் எழும். எனவே அணு ஆயுத தாக்குதல் நடப்பதற்கான மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது.
Read More : பஹல்காம் தாக்குதல்: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை.. நாடு முழுவதும் களமிறங்கிய NIA அதிகாரிகள்..!!