fbpx

நோட்..! மின் தொடர்பான பிரச்சினையா…? வரும் 5-ம் தேதி சிறப்பு முகாம்…! தமிழக அரசு அறிவிப்பு…!

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக 5-ம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மின் நுகர்வோர் & பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் (Executive Engineer/O&M Office) அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மின் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் (Executive Engineer/O&M Office) அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பெறப்படும் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும். மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Is it an electricity-related issue?… Tamil Nadu government announces that a special camp will be held on the 5th

Vignesh

Next Post

இந்தியாவில் ஒவ்வொரு 20-வது நபரும் மன அழுத்தத்தால் பாதிப்பு!. உலகம் முழுவதும் சுமார் 26.4 கோடி பேர் பாதிப்பு!. அதிர்ச்சி தகவல்!

Thu Apr 3 , 2025
Every 20th person in India suffers from depression!. Around 26.4 crore people worldwide suffer from it!. Shocking information!

You May Like