திருச்சி அருகே பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது ஒரு அதிர்ச்சி உண்மை தெரிய வந்துள்ளது. இதனால், காவல்துறையினரே அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
அதாவது, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற கீழக்குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த சரவணன் என்ற பெயிண்டர் அவருடைய மனைவி சமுத்திரவள்ளி தன்னுடைய மூத்த மகளைப் பார்ப்பதற்காக, இளைய மகளை அழைத்துக் கொண்டு, சென்னைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த பெயிண்டர் சரவணன், ராதாகிருஷ்ணன் என்பவரோடு சேர்ந்து, மது அருந்தியபோது, ராதாகிருஷ்ணனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
அதாவது, இந்த விவகாரத்தில், தற்போது ஒரு அதிர்ச்சி உண்மை தெரிய வந்துள்ளது. சரவணனின் மனைவி சமுத்திரவள்ளிக்கும், லால்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
ஆகவே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமுத்திரவள்ளியும், ராதாகிருஷ்ணனும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவரம் நாளடைவில், கணவருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, மனைவி மற்றும் கள்ளக்காதலனை கடுமையாக கண்டித்து இருக்கிறார். ஆனாலும், கள்ளக்காதல் ஜோடி இதுபற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தங்களுடைய கள்ளக்காதலை தொடர்ந்து, உல்லாச வாழ்வைத் திகட்ட, திகட்ட அனுபவித்து வந்திருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான், தன்னுடைய கள்ள காதலி சமுத்திரவள்ளி வீட்டில் இல்லை என்பதை அறிந்து கொண்ட ராதாகிருஷ்ணன், சரவணன் வீட்டிற்கு நேற்று இரவு மது வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். அதன் பிறகு அவரிடம் பேச்சுக் கொடுத்து அவரை மதுவை குடிக்க வைத்து இருக்கிறார். அதன் பிறகு, ராதாகிருஷ்ணனிடம் தன்னுடைய மனைவியுடன் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு சரவணன் தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் கொண்ட ராதாகிருஷ்ணன், சரவணன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டார். அதன் பிறகு, ராதாகிருஷ்ணன் சென்னைக்கு சென்று இருந்த தன்னுடைய கள்ளக்காதலி சமுத்திரவள்ளிக்கு போன் செய்து, சரவணனை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு, சமுத்திரவள்ளி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதோடு, அவரே நேரில் சென்று, திருவெறும்பூர் காவல்துறையிடம் சரணடைந்திருக்கிறார். இதனால், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.