கர்நாடகாவில் மற்றொரு திகிலூட்டும் சம்பவத்தில், அரசு நடத்தும் பள்ளியில் ஆசிரியர்களால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 4 ஆம் வகுப்பு மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பது வயதான பாரத் பராகேரி என்ற மாணவன் கடக்கில் உள்ள நர்குண்ட் நகருக்கு அருகில் உள்ள ஹடாலி கிராமத்தில் இருக்கும் அரசு மாதிரி தொடக்கப் பள்ளியில் படித்து வந்தார். பரத் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தின் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் காணாமல் போயுள்ளதாகவும், அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது கோபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது.