கரூர் வைஸ்யா வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Transaction Banking Group – CMS Operations / SCF Operations / TReDS Operations, Business Process Associate பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 31 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பட்ட, படிப்பில் பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் 5 ஆண்டு இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். ஆர்வம் உள்ள நபர்கள் 25.02.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
For More Info: https://www.karurvysyabank.co.in/Careers/docs/Eligibility%20norms%20-%20Transaction%20Banking%20Group%20-%20CMS%20Operations_SCF%20Operations_TReDS%20Operations.pdf