கிருஷ்ணகிரி அருகே, தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தன்னுடைய கள்ளக்காதலனோடு சேர்ந்து, கொலை செய்து, கல்லை கட்டி கிணற்றில் இறக்கிய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நமது சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ், தன்னுடைய மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் மகாராஜாகடை அருகே வசித்து வந்தார். மேலும், இவர் கல் உடைக்கும் வேலைக்கு சென்று வந்தார் என்றும் கூறப்படுகிறது.
அவருடன், தன்னுடைய இளம் மனைவியையும் கல்குவாரிக்கு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அந்த குவாரியில் கிருஷ்ணகிரி தர்மராஜா நகரை சேர்ந்த விக்ரம் (19) என்ற நபர் வேலை பார்த்தார். அப்போது, மைக்கேல்ராஜின் மனைவிக்கும், விக்ரமுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.
ஆகவே மைக்கேல்ராஜ் வீட்டில் இல்லாத சமயத்தில், மைக்கேல்ராஜின் மனைவி விக்ரமுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட மைக்கேல்ராஜ், தன்னுடைய மனைவியை கண்டித்து இருக்கிறார். இதனால், அதிர்ச்சி அடைந்த மனைவி, கணவர் உயிரோடு இருக்கும் வரை, நம்முடைய கள்ளக்காதலை தொடர்வது ஆபத்து தான் என்று நினைத்து, கள்ளக்காதலர்கள் இருவரும், சேர்ந்து, மைக்கேல்ராஜை கொலை செய்து, கயிற்றால் உடலை கட்டி, உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், அந்தப் பகுதியில், இருந்த ஒரு கிணற்றில், 35 வயது மதிக்கத்தக்க, ஒரு ஆண் பிணம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்பு படையினரின் உதவியோடு, உடலை மீட்டு, கொலை செய்யப்பட்டது யார்? என்று அடையாளம் தெரியாத நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் யார், யார்? என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சூழ்நிலையில்தான், ஆத்துக்காவாய் தகுதியைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியான, மைக்கேல்ராஜ் (36) என்பவர் காணாமல் போய் இருக்கிறார் என்பது தெரிய வந்தது. ஆனால், இறுதியில் கொலை செய்யப்பட்டது. மைக்கேல்ராஜ்தான் என்று தெரியவந்தது.
ஆகவே இந்த கொலை சம்பவம் குறித்து, அவருடைய மனைவி ஜோஸ்பின் சிந்து (28) என்பவரிடம் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், காவல்துறையினர் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில், கள்ளக்காதல் விவகாரத்தில், கணவனை கொலை செய்தது தானும், தன்னுடைய கள்ளக்காதலனும் தான் என்று ஒப்புக் கொண்டார்.பின்பு, இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.