fbpx

கூலித் தொழிலாளி அடித்துக் கொலை.! 16 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது.! பரபரப்பு பின்னணி.!

கட்டிட வேலை தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 16 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அப்பிநாயக்கன்பட்டி சேர்ந்தவர் செந்தில். கூலித் தொழிலாளியான இவர் சாலையோரத்தில் சடலமாக கிடந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் ரமேஷ் என்பவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. காவல்துறையின் விசாரணையில் ரமேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து செந்திலை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

ரமேஷ் வீட்டில் கட்டிட வேலை நடைபெற்று இருக்கிறது. அந்த வேலைகளை செய்து வந்த செந்தில் பாதியிலேயே விட்டுச் சென்றிருக்கிறார். இது தொடர்பாக செந்தில் மற்றும் ரமேஷ் இடையே பகை ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரமேஷ் தனது நண்பரான சாரதி மற்றும் 16 வயது சிறுவனுடன் சேர்ந்து செந்திலை இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்து இருக்கிறார். இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷ் சாரதி மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.

Next Post

பிறந்தநாளன்று எரித்து கொலை செய்யப்பட்ட ஐ டி ஊழியர்.! திருநங்கை வெறி செயல்.!

Sun Dec 24 , 2023
ப்ரேக் அப் ஐடி பெண் ஊழியர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக திருநங்கையை கைது செய்த காவல்துறை அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் நந்தினி. 28 வயதான இவர் வெற்றி என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் வெற்றி என்பவர் திருநங்கை என நந்தினிக்கு தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து […]

You May Like