தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பது தொடர்பாக இன்று (மார்ச் 5) அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அரசியல் வேறுபாடுகளையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, கவுரவம் பார்க்காமல் இந்தக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பாஜக தவிர்த்து தமிழ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்றது. அனைத்து கட்சி கூட்டம் துவங்கியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் கூறிய முக்கிய கருத்துக்களை பார்க்கலாம்.
* மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு நடைப்பெற்றால் தமிழ் நாட்டின் குரல் நசுக்கப்படும்.
* தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையை 30 ஆண்டுக்ளுக்கு தள்ளி வைக்க வேண்டும்.
* மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
* நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரும் தென் மாநிலங்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்க கூடாது.
* மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இலக்கு
* கடத்த பத்து ஆண்டுகளில் வெற்றிகரமாக பல்வேறு முயற்சிகள் நடவடிக்கை வாயிலாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறோம்
* குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை முறையாக செயல்படுத்திய மா நிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. இதனை செயல்படுத்தாத மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றால் நாம் 8 தமிழக எம்.பிக்களை இழக்க நேரிடும்.
* 1971 மக்கள் தொகை அடிப்படைய நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் தற்போது விகிதாச்சாரப்படி உயர்த்தப்பட்டால் கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் 10 தான் கிடைக்கும்
* இதனால் மக்கள் தொகை அதிகமாக இருக்கக்கூடிய மாநிலங்களுக்கு தான் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும்
* தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கான அநீதீ.. தொகுதி மறுசீரமைக்கப்பட்டால் தமிழ்நாடு உரிமை போராட்டம் நடத்தும்.
*தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கக்கூடிய முக்கிய பிரச்சினைகளை அனைத்து கட்சிகள், தலைவர்கள் ஒன்றிணைய வேண்டுகோள் வைக்கிறேன். அனைத்துக் கட்சிகளும் கட்சி எல்லைகளைக் கடந்து குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்