ஒரு இளைஞர் அதிவேகமாக ஓட்டி வந்த கார், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, பல்டி அடித்து, அந்தரத்தில் தொங்கியதில், இளைஞர் உயிரிழந்தார், இருவர் காயம் அடைந்தனர்.
இந்த கோர விபத்து சம்பவம் கர்நாடக மாநிலத்தில் ஹசன் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் வேகமாக வந்த ஒரு கார் பாலத்தின் மீது ஏறி உள்ளது. அப்போது திடீரென அந்த கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், திடீரென்று தடுப்பு சுவரின் மீது மோதி, நான்கு முறை அந்த கார் பல்டி அடித்து இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், பல்டி அடித்து, தூக்கி வீசப்பட்ட கார், பாலத்தின் தடுப்பு சுவரைத் தாண்டி, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
இந்த அகோர விபத்தில், காரை ஓட்டி வந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அந்த காரில் பயணம் செய்த மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இளைஞரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கே சிகிச்சை வழங்கபட்டு வருகிறது.
மேலும் இந்த விபத்துக் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அந்த இளைஞர் அதிவேகமாக இந்த காரை ஓட்டி வந்ததன் காரணமாகத்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.