மகாராஷ்டிரம் மாநிலத்தில் கோவிலுக்கு சென்று விட்டு தனது காதலனுடன் வாக்கிங் சென்ற பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் விரார் பகுதியைச் சார்ந்த 20 வயது இளம் பெண் தனது காதலன் உடன் ஜிவ்தானி கோவிலுக்கு சென்று இருக்கிறார். சாமி கும்பிட்டு விட்டு கோவிலுக்கு அருகே இருந்த மலைப் பகுதியில் இருவரும் வாக்கிங் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் இருவரையும் ஒரு கும்பல் பின் தொடர்ந்து இருக்கிறது. இதனை கவனித்த அந்த பெண்ணின் காதலர் அந்த நபர்களுடன் விவாதிக்கவே அந்தப் பிரச்சனை கைகலப்பாகி இருக்கிறது. இவர்களைப் பின் தொடர்ந்த இரண்டு நபர்களும் அந்தப் பெண்ணின் காதலரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர் அந்த நபர் மயக்கம் அடைந்தவுடன் அவரது காதலியான இந்த பெண்ணை ஆளில்லாத இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்த பெண்ணின் காதலர் அருகில் இருந்த ஊர்காரர்களை அழைத்து தனது காதலிக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி இருக்கிறார். இது தொடர்பாக அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரித்து விரார் பகுதியைச் சார்ந்த தீரஜ் ராஜேஷ் சோனி, யாஷ் லக்ஷ்மண் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் போதை மருந்துக்கு அடிமையானவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் நடந்த போதும் போதை வஸ்துக்களை அதிக அளவில் எடுத்துக் கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தற்காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இது போன்ற குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.