மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தில் யுவராஜ் என்ற 23 வயது இளைஞரின் தந்தை ஐந்தாண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். அதன் பின் தாய் ரத்னா தனியாக சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். கணவர் இறந்த பின்னர் உறவினர்கள் எந்த உதவியும் செய்யவில்லை.
அத்துடன் நல்ல கெட்ட காரியங்களுக்கு கூட ரத்னாவை அழைக்காமல் உதாசீனப்படுத்தி வந்துள்ளனர். கணவன் இல்லாத காரணத்தால் அவர் பல விழாக்களில் ஒதுக்கி வைக்கப்பட்டு வந்துள்ளார். மேலும், சில இடங்களில் தரம் தாழ்த்தப்பட்டு நடத்தப்பட்டுள்ளார். இது அவருக்கு மன பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆகவே, பலரிடமும் பேசுவதை தவிர்த்துக் கொண்டார். அனைத்து சுமைகளையும் கடந்து மகனை அவர் வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், மகன் யுவராஜ் தனது தாய்க்கு ஒரு துணை வேண்டும் என்று ஆசைப்பட்டு அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க நினைத்துள்ளார். அதன்படி மூன்று ஆண்டுகளாக போராடி தற்போது அவருக்கு ஒரு துணை தேடி தந்துள்ளார்.
அதன்படி ரத்னாவுக்கு உறவினர்கள் முன்னிலையில் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. மகன் யுவராஜ் தான் இந்த திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்துள்ளார்.